திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "கரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழ்நாடு மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்டத்திற்கும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களையும் நியமித்து அவர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகளை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.