தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு எதிராக மா.கம்யூ. கட்சியினர் போராட்டம்! - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அவசர சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Aug 26, 2020, 11:48 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பள்ளிவாசல் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதம்தோறும் மத்திய, மாநில அரசுகள் ரூ.12,500 நிவாரணமாக வழங்கிட வேண்டும், தனியார் மருத்துவமனைகளை கரோனா வார்டுகளாக கையகப்படுத்த வேண்டும், வங்கி கடனுக்கான இ.எம்.ஐ. சுய உதவிக்குழுக்கள் கடன்களை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதுடன் வட்டியையும் ரத்துசெய்திட வேண்டும், பொது விநியோக கடைகளில் உணவுப் பொருள்கள் அனைத்தும் விலையின்றி வழங்கிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்!
மேலும், மின் கணக்கீடு இரண்டு மாதம் என்பதை மாற்றி மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கடன்கள் வழங்கிட வேண்டும், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details