திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலான் தோப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரவிந்தன் (21) கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளி மாணவியை அரவிந்தன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து சிறுமி விடுதிக்கு சென்றுள்ளார். ஆனால் சிறுமி விடுதிக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.