தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அந்தவகையில், திருவாரூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென கனமழை பெய்தது.
குறிப்பாக திருவாரூர் நகர பகுதி, வாளவாய்க்கால், ஆண்டிபந்தல், சேந்தமங்கலம், விளமல், குடவாசல், வலங்கைமான், சன்னநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.