தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வருமானத்தை காட்டிலும் மக்கள் வவுறு நிறைவதுதான் பெரிது’- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டியின் பாசம்...! - idli and Dosa for one rupee

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தனது வருமானத்தை காட்டிலும் மக்கள் வயிறு நிறைவதுதான் பெரிது என ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார் திருவாரூர் பாட்டி...!

‘வருமானத்தை காட்டிலும் மக்கள் வவுறு நிறைவதுதான் பெரிது’- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டியின் பாசம்...!
‘வருமானத்தை காட்டிலும் மக்கள் வவுறு நிறைவதுதான் பெரிது’- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டியின் பாசம்...!

By

Published : Aug 22, 2020, 7:39 PM IST

Updated : Aug 25, 2020, 4:39 PM IST

திருவாரூர் அருகே உள்ள நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்த 85 வயது கமலா பாட்டிதான் இந்தப் பெருமைக்குரியவர். பாண்டையாற்றின் கரையோரத்தில் கீற்று கொட்டைகையில் இட்லி கடை நடத்திவருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்துவருகின்றனர்.

இருந்தபோதிலும், 50 ஆண்டுகளுக்கு மோலாக தன்னுடைய வருமானத்திற்காக இட்லி கடை நடத்திவரும் பாட்டி, இந்த கரோனா நெருக்கடியிலும் ஒரு ரூபாய்க்குதான் இட்லி, தோசையை விற்பனை செய்துவருகிறார்.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி

இந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கும் பாட்டிகடையில் சாப்பிட்டால், பத்து ரூபாய்க்கு வயிறாற சாப்பிடலாம் என்பதால் விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் பாட்டிக்கடையை நாடுகின்றனர்.

இது குறித்து விவசாயி பக்கிரி கூறுகையில், “எனக்கு தெரிந்தது முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாட்டியம்மா ஒரு ருபாய்க்கு இட்லியும், தோசையும் வழங்கிவருகிறார். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு 10 ரூபாயில் பசி போய்விடுகிறது. பெரிய ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டால் ஒரு தோசை 35 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையும் உள்ளது.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டியின் பாசம்.

பாட்டியிடம் வந்தால் காலை உணவு பத்து ரூபாயிலே வயிறு நிரம்பி விடுகிறது” எனக் கூறினார்.

50 வருசமாக ஒரு ரூபாய் விற்பனை செய்துவரும் பாட்டியிடம் கேட்டால், தனது வருமானத்தை காட்டிலும் மக்கள் வயிறு நிறைவதுதான் பெரிது என்று கூறி அன்பில் நிரப்பி விடுகிறார் பாட்டி.

இதுகுறித்து கமலா மூதாட்டி நம்மிடம் கூறிகையில், “என் தாய் -நான் சிறுவயதாக இருந்தபோது 50 பைசா 50 பைசா தோசை விற்று வந்தார். அவர் இறந்த பிறகு இதை நான் எடுத்து இன்று வரை நடத்திவருகிறேன். இதில் இன்றளவு ஒரு ருபாய்க்கு இட்லியும், தோசையும் விற்று வருவதால் பல்வேறு ஏழை மக்கள் அனைவரும் என்னிடம் சாப்பிட்டு செல்கின்றனர். இது எனக்கு மனதிற்கு நிம்மதியாகவும் மற்றவர்களின் பசியைப் போக்குவதில் உள்ள சந்தோஷம் நிம்மதி” என நம்மிடம் பகிர்கிறார் பாட்டி.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி

இந்த கரோனா நெருக்கடியிலும் தன் வருமானத்தை நினைக்காமல் இன்றளவும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்றுவரும் கமலம் பாட்டி பாராட்டிக்குரியவரே...!

இதையும் படிங்க...தயான் சந்த் விருது பெறவுள்ள ரஞ்சித் குமாரின் பிரத்யேக பேட்டி...!

Last Updated : Aug 25, 2020, 4:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details