திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். இவரது வீட்டிற்கு கார்த்திக் என்ற இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக, ஜான்சன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் 16 வயது சிறுமியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கார்த்திக் சிறுமியிடம் பழகிவந்துள்ளார். பின்னர் ஒருநாள் அச்சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட ஜான்சனின் நண்பர்களான கார்த்திக், விஸ்வராஜ் ஆகிய இருவரும் சிறுமியைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து நான்கு மாத காலமாக, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அச்சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமிக்கு உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து, அவரது பெற்றோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக்கூறி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.