தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் நாட்டு நலப்பணித் திட்டம் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே உள்ள கீழப்படுகை கிராமத்தில் மாவட்ட சுகாதாரத் துறையும், தனியார் பள்ளியும் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.
இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து முழு பரிசோதனை செய்துகொண்டனர். முகாமினை தனியார் பள்ளியின் தாளாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சந்திரா முருகப்பன் தொடங்கிவைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருதேவ் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு கிராம மக்களுக்கு சிகிச்சையும் அதற்கான மருந்துகளும், மேற் சிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கினர்.