தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் கடும் உரத்தட்டுப்பாடு - பரிதவிக்கும் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.

thiruvarur-formers-demand
thiruvarur-formers-demand

By

Published : Oct 10, 2021, 11:08 AM IST

திருவாரூர்: இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் நீர் வந்ததால் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து நிர்ணயித்த இலக்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். தற்போது குறுவை அறுவடை பணிகள் நிறைவுபெற்று மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பாவிற்கு தயாராகும் விவசாயிகள் நடவு பணிகளை தொடங்குவதற்கு முன் அடி உரம் தெளிக்க வேண்டும். ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் கடுமையான உரதட்டுப்பாடு நிலவி வருவதால் உரம் தெளிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

இது குறித்து பேசிய அவர்கள், ”தற்போது மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கை நிர்ணயித்துள்ளோம். தற்போது நடவு பணிகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அடி உரம் இடவேண்டும். அப்போதுதான் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பயிர்கள் வேர் பிடித்து கொள்ளும் காலம் தாழ்த்தி தெளித்தால் பயனற்றுப் போய் விடும்.

பரிதவிக்கும் விவசாயிகள்

தற்போது மாவட்டம் முழுவதும் 16 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படுகிறது. அதனால் கையிருப்பில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே உள்ளதாக அலுவகர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் கடைகளுக்குச் சென்று கேட்டால் உரங்கள் கேட்டால் இருப்பு இல்லை எனக் கூறுகின்றனர்.

வேளாண் கூட்டுறவு மையத்திலும் உரங்கள் இருப்பு இல்லை என தட்டிக் கழிக்கின்றனர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரம் வேலை நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details