தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு நேரத்தில் மும்முரமாக உலாவும் தீயணைப்புத் துறையினர் - இரவில் தீயணைப்பு துறையினர் கிருமிநாசினி தெளித்தல்

திருவாரூர்: முக்கிய கடைவீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் மும்முரமாக உலாவும் தீயணைப்பு துறையினர்
இரவு நேரத்தில் மும்முரமாக உலாவும் தீயணைப்பு துறையினர்

By

Published : Jun 2, 2020, 3:32 PM IST

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனையொட்டி கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கின் ஆரம்ப கால கட்டத்தில் பகல் நேரங்களில் திருவாரூரில் உள்ள முக்கிய கடைவீதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது.

கிருமிநாசினி தெளித்தல் பணியில் தீயணைப்பு துறையினர்

ஆனால் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பகல் நேரத்தில் கிருமிநாசினி தெளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இரவு 12 மணிக்கு தொடங்கி யாருக்கும் தொந்தரவில்லாமல் நடைபெற்று வருகிறது என திருவாரூர் தீயணைப்புத் துறையினர் சார்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியா-நேபாள எல்லையில் பிறந்த ’பார்டர்’ குழந்தை - மோடியை விமர்சித்த அகிலேஷ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details