தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகை... உயர்த்த விவசாயிகள் கோரிக்கை! - thiruvarur collector news

திருவாரூர்: 2018-19ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

farmers
farmers

By

Published : Jun 1, 2020, 8:32 PM IST

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்த 211‌ விவசாயிகள் கடந்த 2018-19ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு தலா 500 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

ஆனால், ஒரு விவசாயிக்கு ரூ.227 என்ற அடிப்படையில் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களுக்கு 67% பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், மழையூர் கிராமத்துக்கு மட்டும் 0.87% மட்டுமே இழப்பீடுத் தொகை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்த விவசாயிகள், குறுவை சாகுபடி தொடங்கியுள்ளதால், பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை சற்று உயர்த்தி வழங்கினால், சாகுபடியைத் தொடங்க உதவியாக இருக்கும் எனக் கோரிக்கை மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details