திருவாரூர்: தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தவிட மாட்டோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
திருவாரூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட விவசாயிகளும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் கடுமையான போராட்டடம் நடத்தப்படும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய விவசாயிகள், "ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான விரோதப்போக்கை கடைப்பிடித்துவருகின்றது.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஒன்றிய அரசு திணித்துவருகிறது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்திவருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் அப்பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியது கைவிடப்பட்டது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மாசடைந்த நிலம் தற்போது அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அமைதி காத்துவருகிறது.
ஒன்றிய அரசு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதியளித்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏலத்திற்கு கண்டனம் : பேராசிரியர் த.ஜெயராமன்!