தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை; தூர்வார வலியுறுத்தும் கிராம மக்கள்!

திருவாரூர்: பிலாவடி மூலை, கேக்கரை உள்ளிட்ட கிராம மக்களுக்கு பாசனநீரை வழங்கி வந்த கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

By

Published : Sep 22, 2020, 4:13 PM IST

odam pokki river channel  thiruvarur news  odam pokki river a chennel  odampokki river  odampokki river channel a
ஓடம்போக்கி ஆறு சேனல் ஏ வை தூர்வார கோரிக்கை வைக்கும் எட்டுகிராம மக்கள்

திருவாரூர் அருகேயுள்ள பிலாவடி மூலை, கேக்கரை, மருதபட்டினம், கடகம்பாடி, பழவர்ணகுடி, மெச்சக்குடி, உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, குறுவை, சாகுபடி கடந்த காலங்களில் நடந்தது. கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதிக்கு மேட்டூர் அணை நீர் வராததால், தற்போது, 200 ஏக்கர் அளவிலேயே விவசாயம் நடைபெற்றுவருகிறது.

திருவாரூர் ஓடம்போகியாற்றில் இருந்து பிரியும் 'ஏ'சேனல் வாய்க்கால்கள்தான் இப்பகுதி விவசாயிகளின் பாசனத்திற்குத் தேவையான நீரை வழங்கிவந்தது. இந்த வாய்க்காலை நம்பி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாசன வசதிபெற்று சாகுபடி செய்துவந்த நிலையில், தற்போது வாய்க்காலானது சரிவர தூர்வாரப்படாததால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை மண்டிக்காட்சியளிக்கின்றன.

கால்வாயை தூர்வார வலியுறுத்தும் விவசாயிகள்

நகர்ப்பகுதிகளில் வாய்க்காலில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் வாய்க்கால் தடம் தெரியாமல் காட்சியளிக்கின்றது. இந்த வாய்க்காலை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. கிராம மக்களும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

இதையும் படிங்க:திருவாரூரில் காவல் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details