தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்க வந்த கர்ப்பிணி மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல் - PREGNANT LADY

திருவாரூர் : கேக்கரை அருகே ஆட்டோவில் வாக்களிக்க வந்த கர்ப்பிணியை அதிமுகவினர் கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்ப்பிணி உதயசேகரி

By

Published : Apr 18, 2019, 5:34 PM IST

தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்களும் திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் மற்றும் நடிகர்களும் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் கேக்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகை தொகுதி மக்களைவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு அதே பகுதியைச் சேர்ந்த குணசேகர் கர்ப்பிணி உதயசேகரி என்பவரை வாக்களிப்பதற்காக தனது ஆட்டோவில் அழைத்து வந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுகவினர் திடீரென கர்ப்பிணி உதயசேகரி வந்த ஆட்டோவை மறித்து, எப்படி பரிசுப்பெட்டி சின்னம் ஒட்டிய ஆட்டோவில் வாக்களிக்க அழைத்து வரலாம் என ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து அதிமுகவினர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ஆட்டோவில் இருந்த கர்ப்பிணி உதயசேகரியை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

நிறமாத கர்ப்பிணி மீது தாக்குதல்

இதனையடுத்து, ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த கர்ப்பிணி உதயசேகரி திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். வாக்களிக்க வந்த கர்ப்பிணி உதயசேகரி மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details