திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் (35). இவரது மனைவி சத்யா (28). இவர் வழக்குரைஞராகப் பணிபுரிந்துவருகிறார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு சாணக்கியன் (5) என்ற மகனும், கீர்திகா ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், செங்குட்டுவன், அவரது தாய் இருவரும் சத்யாவிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகப் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வரதட்சணையால் கொலை செய்யப்பட்ட மனைவி அதில், மனைவியை செங்குட்டவன் அடித்துக் கொலைசெய்துள்ளார். பின்னர் சடலத்தைக் காரில் ஏற்றிக்கொண்டுச் செல்வதை அறிந்த உறவினர்கள் காரை மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது, காரிலிருந்து இறங்கிய செங்குட்டுவன் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவலறிந்த நீடாமங்கலம் காவல் துறையினர் விரைந்துவந்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய செங்குட்டுவனைத் தேடிவருகின்றனர். வரதட்சணைக்காக கணவனே மனைவியை அடித்துக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:8 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்; காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்!