தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர் சங்கப் பேரவையை முன்னிட்டு திமுகவினர் பேரணி - திருவாரூர் திமுக பேரணி

திருவாரூர்: தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கப் பேரவை பொன்விழாவை முன்னிட்டு திமுகவினர் நடத்திய பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

thiruvarur-dmk-farmers-meeting-rally
தொழிலாளர் சங்கப் பேரவையை முன்னிட்டு திமுகவினர் பேரணி

By

Published : Mar 15, 2020, 11:17 PM IST

திருவாரூர் அருகே தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொன்விழா மண்டல மாநாடு இன்று மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு திமுகவினர் பேரணியை தொடங்கினர்.

திமுகவினர் பேரணி

இந்த பேரணியை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியானது சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள யூ.பீ திருமண மண்டப வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் திமுக கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்கள், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர் சங்கப் பேரவையை முன்னிட்டு திமுகவினர் பேரணி

இதையும் படிங்க:அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அவதூறு: திமுக பிரமுகர் கைது

ABOUT THE AUTHOR

...view details