திருவாரூர்: நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலத்தை உழுவதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிறு குறு விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் டிராக்டரை நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் 8 டிராக்டர்கள் மட்டுமே உள்ளதால் சிறு குறு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் டிராக்டர் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
டிராக்டர் கிடைக்காமல் திருவாரூர் விவசாயிகள் அவதி இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 8 டிராக்டர்கள் மட்டுமே உள்ள நிலையில் இதனை பெரு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே பெற்றுக் கொண்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால் சிறு குறு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் டிராக்டர் கிடைப்பதில்லை. வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சென்று கேட்டால் காரணம் காட்டி அலைக்கழிக்கின்றனர் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு கூடுதலாக வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் டிராக்டர்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மலை இருக்கு, மழையும் இருக்கு... ஆனா, குடிக்குற தண்ணிக்கு 2 கிணறுதான் இருக்கு...