தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுய ஊரடங்கு: வெறிச்சோடி காட்சியளித்த திருவாரூர் - திருவாரூரில் பேருந்து நிலையம்

திருவாரூர் : சுய ஊரடங்கின் காரணமாக திருவாரூர் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

சுய ஊரடங்கு வெறிச்சோடி காட்சியளித்த  -திருவாரூர் மாவட்டம்
சுய ஊரடங்கு வெறிச்சோடி காட்சியளித்த -திருவாரூர் மாவட்டம்

By

Published : Mar 22, 2020, 10:55 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சுய ஊரடங்கிற்காக இன்று அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதையடுத்து சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவாரூரில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடைவீதிகள் என எந்த இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் காணப்படவில்லை. மேலும் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் ஆகியவையும் இயங்கவில்லை.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்களில் இன்று நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன். ஒரு சில திருமணங்கள் மட்டும் காலை 6 மணிக்கு முன்னரே நடைபெற்று முடிந்துவிட்டன. திருவாரூரிலுள்ள மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான, கொரடாச்சேரி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலை தான் நீடித்தது.

சுய ஊரடங்கு வெறிச்சோடி காட்சியளித்த திருவாரூர் மாவட்டம்

இதையும் படிங்க :'நாளை நடக்கவிருக்கும் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை'

ABOUT THE AUTHOR

...view details