திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் பிரிவில் பணியாற்றிவந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நன்னிலத்தில் ஐந்து பேர், மன்னார்குடியில் நான்கு பேர், திருத்துறைப்பூண்டியில் ஒன்பது பேர், குடவாசலில் நான்கு பேர் உள்பட மொத்தம் 36 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.