திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33 நபர்களும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் முழுவதுமாக குணமடைந்தனர். இதையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உற்சாகமாக கைத்தட்டி, அவர்களது வீட்டிற்குத் தனி ஆம்புலென்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.