தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடுகளிலிருந்து வந்த 410 பேர் தனிமை - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்!

திருவாரூர்: வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய 410 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்தார்.

ஆனந்த்
ஆனந்த்

By

Published : Mar 25, 2020, 8:53 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூரில் கரோனா குறித்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், " திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய 410 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் சுய உதவிக் குழுக்கள் மூலமாக நாளொன்றுக்கு 7000 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மூன்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பேசுகையில்," மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 கடலோர காவல்படை சோதனைச்சாவடி எல்லைகள், 2 புதுச்சேரி மாநில சோதனைச்சாவடி எல்லைகள், 11 வெளிமாவட்ட சோதனைச் சாவடிகள் என மொத்தம் 16 எல்லைகளை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மலைப்பாதையில் பயணித்த 9 பேர் காட்டுத்தீயில் சிக்கிய பரிதாபம்; இருவர் உயிரிழப்பு, தேடுதல் வேட்டையில் தீயணைப்புத் துறை!

ABOUT THE AUTHOR

...view details