திருவாரூர்:திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான வினோதினி, தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோருடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவாரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் - thiruvarur district news in tamil
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோதினி இன்று மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
திருவாரூர் தொகுதி நாதக வேட்பாளர் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்
திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க அவர் வந்திருந்தார். இதனையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உட்பட மூன்று நபர்கள் மட்டுமே கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட மனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலச்சந்திரனிடம் வழங்கி வினோதினி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க:கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!