தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் அருகேயுள்ள சுரக்குடியில் நேற்று (பிப். 25) நடைபெற்றது.
இம்முகாமில் 140 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டது. அதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கும், வேலையில்லா பட்டதாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இறுதியாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வழங்கினார்.