தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக புகழ் பெற்ற ஆழித் தேரோட்டத்திற்கு தயாராகும் திருவாரூர்! - திருவாரூர்!

திருவாரூர்: உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் ஒன்றாம் ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி தேர் அலங்கார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உலக புகழ் பெற்ற ஆழித் தேரோட்டத்திற்கு தயாராகும் திருவாரூர்!

By

Published : Mar 22, 2019, 8:39 PM IST

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் உள்ள தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

மேலும் திருவாரூரில் கி.பி 5-6 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்கான சான்றுகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்களில் உள்ளது.

இவ்வளவு சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திரப் பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி காலை எழு மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கார பணிகள் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்றன. தேரின் மேல் பகுதியில் நான்கு அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேரின் சக்கரங்கள் கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட முட்டு கட்டைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன வருகின்றனர்.

உலக புகழ் பெற்ற ஆழித் தேரோட்டத்திற்கு தயாராகும் திருவாரூர்!


ABOUT THE AUTHOR

...view details