திருவாரூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற தியாகராஜர் கோயில், தலைமை சப்தவிடங்க தலமாகும். காவிரி தென்கரையில் உள்ள இக்கோயிலில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது சிவத்தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும். வருடா வருடம் இங்கு தேரோட்டம் தெப்ப உற்சவமும் உலகப் புகழ்பெற்ற சிறப்புடையதாகும். இந்நிலையில் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் நடந்தது.
தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்
திருவாரூர்: தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் வீதி உலா நடைபெற உள்ளது. இதனையடுத்து தேருக்கான பணிகள் கோயில் நிர்வாகிகள் மிகத் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளனர். கோயில் அருகே உள்ள தேர் மண்டபத்தை ஒட்டிய நிலை நிறுத்தப்பட்டுள்ள தேர் கண்ணாடி படைப்புகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதற்காக கடந்த வருடம் 40 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் தடுப்புகள் தாங்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு தேரைச் சுற்றி பொருத்தப்பட்டன. இந்தத் தேர் திருவிழா மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோயில் உயர் அலுவலர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.