திருவாரூர்: திருத்துறைப்பூண்டியை அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியில் இன்று (ஜூலை.14) காலை 80 வயது மதிக்கத்தக்க காசிநாதன் என்பவர் அப்பகுதியில் உள்ள கடைவீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு! - திருவாரூர் மாவட்ட செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
thiruvarur-car-accident-old-man-dead
அப்போது திருநெல்வேலியில் இருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று, காசிநாதன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உள்பட 5 பெண்கள் உயிரிழப்பு!