சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துவரும் நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ்
பாதிப்புக்கு உள்ளானவர்களை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சிகிச்சை அளித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை உத்தரவின்பேரில், கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் சீனாவில் இருந்து சொந்த ஊர் வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (39), சீர்காழியைச் சேர்ந்த மணிகண்டன் (32), பொறையாரு பகுதியைச் சேர்ந்த ராஜா (29) ஆகியோர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை கிண்டி ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
48 மணிநேரம் பரிசோதனைக்குப் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் கூறிய நிலையில், நேற்று அசோக்குமார், மணிகண்டன் ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸால் பாதிப்படையவில்லை என முடிவுகள் வந்துள்ளது. மேலும் மூன்றாவது நபரான ராஜாவின் பரிசோதனை முடிவு திங்கட்கிழமை தெரியவரும் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவமனை
இதையும் படிங்க: கரோனா - மருத்துவர்களுக்கு பிரத்யோக உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார்!