தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் வயலில் இறங்கி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த அமைச்சர்! - அமைச்சர் காமராஜ்

திருவாரூர்:  உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் சட்டப்பேரவை வேட்பாளர் ஜீவானந்தத்திற்கு ஆதரவாக வயலில் இறங்கி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

thiruvarur

By

Published : Apr 5, 2019, 3:09 PM IST


தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜீவனாந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார்.

திருவாரூர் அருகே அம்மையப்பன், தாழைக்குடி, காவனூர் ஆகிய பகுதிகளில் அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர் ஜீவானந்தத்தை ஆதரித்து அமைச்சர் காமராஜ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். மேலும், வாகன பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாய பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் காமராஜ் தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details