தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு, கல்வியாளர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டுள்ளது.