தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சேறு செதுக்கி வரப்பு அமைக்கும் கருவி' வாடகைக்கு எடுத்து பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

திருவாரூர்: வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் சேறு செதுக்கி வரப்பு அமைக்கும் கருவியை வாடகைக்குப் பெற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

collector
collector

By

Published : Jul 10, 2020, 12:10 AM IST

விவசாயிகள் நேரடி நெல் சாகுபடியில், சேற்று உழவின் போது வரப்புகளை செதுக்கி சேறுகள் பூசி வரப்பு அமைத்தல் என்பது மிகவும் கடினமான பணியாகும். இதனால், விவசாயத்தில் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அடிப்படையில் வரப்பு அமைக்கும் பணியினை மேற்கொள்ள டிராக்டரால் இயங்கும் வரப்பு செதுக்கி சேர் பூசி வரப்புகளை அமைக்கும் கருவிகள் வேளாண் பொறியியல் துறையின் மூலம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த விலைக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.

இந்தக் கருவியை ஒரு மணி நேரத்திற்கு 340 ரூபாய் என்ற குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகள் பெற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக விவசாயிகளுக்கு சந்தேகங்கள் இருந்தால் திருவாரூர் உதவி செயற்பொறியாளர் எண் - 99523 26036, மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் எண் - 94431 08384 ஆகிய இருவரின் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details