உலகம் போற்றும் திருவாரூர் தேர் அழகாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் 96அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டது. ஆழித் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாகக் காலை 7.15 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுக்க ஆழித்தேர் நகர்ந்து வந்தது.
பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம்! - திருவாரூர் ஆழித்தேர்
திருவாரூர்: பக்தர்கள் விண்ணதிர முழங்க, ஆடி அசைந்து வந்த திருவாரூர் ஆழித்தேர் நேற்று காலை 7.15 மணிக்குத் தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து மாலை 7.25க்கு நிலையடி வந்து சேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அம்பாள் தேரும், சண்டிகேசுவரர் தேரும் இழுக்கப்பட்டது.ம் ஆழி தேரோட்டமானது கீழவீதியில் தொடங்கி தெற்குவீதி, மேலவீதி,வடக்குவீதி வழியாக மீண்டும் நிலையடிக்கு மாலை 7.25 மணிக்குள் வந்து சேர்ந்தது.இதனைத் தொடர்ந்து தியாகராஜர்க்கு தீபாராதனை காட்டப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆழித்தேரானது தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தபோது தேரின் இரண்டு சக்கரங்களும் ஓடுதளமான சிமெண்ட் சாலையிலிருந்து விலகி மண்தரையில் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து உற்சாகம் குறையாத பக்தர்களின் முயற்சியால் 4 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தேர் மீண்டும் சாலைக்குக் கொண்டு வரப்பட்டு தனது பவனியைத் தொடர்ந்தது.