திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் கலந்துகொண்டார். பின்ணர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை அளவீடு செய்த தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் வழங்கிய தொகையை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கணக்கில், நிலுவையில் உள்ள கடனுக்கு வரவு வைக்காமல் முழுவதுமாக விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடியானது துவங்கிய நிலையில் நடவுபணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. மழையும் தொடர்ந்து பொழிந்து வருவதால் போதிய தண்ணீரும் ஆற்றில் ஓடுவதால் விவசாயிகள் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளலாம்" என்றார்.