தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினரை கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - திருவாரூர் வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் : முத்துப்பேட்டையில் வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்களை கைது செய்யாத காவல்துறையினரை கண்டித்து வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரை கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
காவல்துறையினரை கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

By

Published : Jul 28, 2020, 10:47 PM IST

திருத்துறைபூண்டி நாச்சிகுளம் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன் அந்த பகுதியை சேர்ந்த சில நபர்கள் கிராம குளத்தில் மணல் அள்ளி சென்று வெளியில் விற்றுள்ளனர்.

இதனை அதே பகுதியை சேர்ந்த வழக்குரைஞர் சக்திவேல் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளை கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதனையடுத்து, முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குரைஞர் சக்திவேல் புகார் அளித்துள்ளார். காவல்துறையில் அந்த புகாரை பெற்றுக்கொண்டு ஒருவாரம் தாண்டிய நிலையில், மணல் கொள்ளையர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், காவல்துறையினரைக் கண்டித்து திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர் சங்க அலுவலகம் முன்பு வழக்குரைஞர் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞர்களின் சங்கத் தலைவர் ஆர்.பி அருள் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details