திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆதிரெங்கம் ரேஷன் கடையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ரேஷன் கடைக்கு அலைந்தாலும் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், அதிருப்தி அடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆதிரெங்கம் பகுதி நேர ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.