தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முதியவர் உயிரிழப்பு - லியாகத் அலி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thiruthiraipoondi Caa protest Died in heart attack
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் மாரடைப்பால் முதியவர் உயிரிழந்தார்!

By

Published : Mar 1, 2020, 1:48 PM IST

திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணலி ஊராட்சிக்குட்பட்ட குறும்பல் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர் லியாகத் அலிக்கு (60) திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மாரடைப்பால் உயிரிழந்த முதியவர் வீட்டு முன்பு அமர்ந்திருக்கும் அவரது உறவினர்கள்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. முதியவர் இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழ்நாடு முழுவதும் முழங்கும் இஸ்லாமியர்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details