திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் திருக்குளம் தூர்வாரி படித்துறை அமைக்கும் பணி, சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முதற்கட்டப்பணி நடைபெற உள்ளது. இந்தக் குளத்திலிருந்து எடுக்கப்பட உள்ள மண்ணைக் கொண்டு கோயிலின் சுற்றுச்சுவர் உயர்த்தப்படவுள்ளது. நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் வகையில், பெரும் அளவில் பள்ளப்பகுதியாக இருந்த சுற்றுப்புறப்பகுதியினை, மேடாக்கி மைதானமாக மாற்றும் பணிகள் நடைபெறயிருக்கின்றன.