திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூணடியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவுத் துறை அமைச்சர் காமராஜ் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. கஜா புயல் தாக்கி நாளையுடன் ஒரு வருடம் முடியும் நிலையில் இன்னும் சில கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என்பது உண்மைதான்.
ரஜினி கூறுவது போல அரசியல் வெற்றிடம் இல்லை - அமைச்சர் காமராஜ் மத்திய அரசின் காப்பீட்டுத்தொகை நிறுவனம் கணக்கெடுப்பின் போது சில இடங்களை பாதிக்கப்படாத இடம் என்று கணக்கீடு செய்துள்ளது. அது படிப்படியாக சரி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத்தொகை கூடிய விரைவில் வழங்கப்படும்.
ரஜினி கூறுவது தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதே இல்லை. அதிமுக அரசு ஆட்சியை வலிமையாகவும், செம்மையாகவும் நடத்திக்கொண்டிருக்கிருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: ‘ஸ்டாலின் நாக்கில் சனி’ - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு