திருவாரூர் அருகே முகந்தனூர் கிராமத்தில் கடந்த எட்டு மாதங்களாக ஊருக்கு வெளியே அரசு மதுபான கடை செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு கடையினை ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மதுக்கடையில் பணிபுரியும் சுரேஷ், கணேஷ் ஆகியோர் கடைக்குச் சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் சிதறிக் கிடந்துள்ளன.
இந்தத் தகவலறிந்த கொரடாச்சேரி காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடையின் ஷட்டர்களை உடைக்க முடியாததால் பின்பக்க சுவரில் ஆள்புகும் அளவில் துளையிட்டு கடையிலிருந்த பணம், நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.