திருவாரூர் மாவட்டம் குடவாசலையடுத்து நாரணமங்களம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக்கால் பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் அவ்வழியாக சென்று வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடையை மூட வலியுறுத்தி இரண்டு மாதத்திற்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் தரப்பினர் 45 நாட்களில் கடையை மாற்றி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதத்திற்கு மேலாகியும் கடை மூடப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.