திருவாரூர்: நன்னிலம் அருகே அன்னியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாடசாலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சுடுகாட்டிற்குச் செல்ல ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
நன்னிலம் அருகே ஆற்றில் சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலை! - திருவாரூர் மாவட்ட செய்திகள்
நன்னிலம் அருகே கழுத்தளவு ஆற்று நீரில் சடலத்தை தூக்கிச்சென்ற அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆற்றில் சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலை
தற்போது அப்பகுதியில் வயதானவர் ஒருவர் உயிரிழந்துள்ளதால், அவரை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்ய கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் சென்றனர். அப்போது வயதான இருவர்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டனர். பின்னர் அவர்களை பத்திரமாக அப்பகுதியினர் மீட்டனர்.
இதையும் படிங்க:'பன்னீருக்கு குறையும் மவுசு' - கொடைரோடு பூ சந்தையில் பன்னீர் ரோஜா விலை கடும்சரிவு