திருவாரூர் அருகே குளிக்கரை அருகே கீரங்கோட்டம் பகுதியில் சிந்தாமணி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நூறாண்டு பழமையான ஒன்றரை அடி அம்மன் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஐம்பொன் சிலை மாயம்; காவல்துறையினர் விசாரனை - ஐம்பொன் சிலை கடத்தல்
திருவாரூர்: பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் சிமெண்ட் மூட்டைகளை கோயில் மண்டபத்தில் அடுக்கி வைப்பதற்காக சென்றார். அப்போது ஆலயத்தின் கருவறை கதவு பூட்டு இல்லாமல் திறந்து கிடப்பதையடுத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது உள்ள இருந்த அம்மன் சிலை திருடு போயிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நூற்றாண்டு பழமையான சிலை என்பதால் அதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். உடனே இதுகுறித்து ரமேஷ் கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். காணாமல் போன அம்மன் சிலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட அம்மன் சிலையை உடனடியாக மீட்டு தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.