தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெட்டாற்றில் மாயமான மாணவனை தேடும் பணி தீவிரம் - The intensity of work looking

திருவாரூர்: வெட்டாற்றில் ஆற்றில் குளிக்க சென்றபோது மாயமான மாணவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறை ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர்.

மாயமான மாணவனை தேடும் தீயணைப்புத் துறையினர்

By

Published : Sep 25, 2019, 5:29 PM IST

திருவாரூர் மாவட்டம், வடகண்டம் ஊராட்சிக்குட்பட்ட மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஜெயசீலன் (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், இன்று காலையில் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வெட்டாற்றில் அவர் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்திருந்ததால், ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஜெய்சீலன் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதைப் பார்த்த சக நண்பர்கள் ஜெயசீலன் அடித்து செல்லப்படுவதைக் கண்டு கூச்சலிட்டனர். கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து மாணவனை தேடினர்.

ஆனால் மாணவர் கிடைக்காததால் உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் வந்த காவல் துறையினர் மாயமான மாணவனை தேடி வருகின்றனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகியும் மாணவன் கிடைக்காததால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் 4 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சோகம் மறைவதற்குள் இன்று மீண்டும் ஒரு மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details