திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள தண்டலை ஊராட்சியில் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் தயார் நிலை: உணவுத்துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசியல் செய்திகள்
திருவாரூர்: விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ”ஜூன் மாதத்திற்கு இதுவரை 50 விழுக்காடு விலையில்லா பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மாதங்கள் இலவசமாக பொருள்கள் வழங்குவது குறித்து நிலைமைக்கேற்ப முதலமைச்சர் முடிவெடுப்பார். மேலும், எட்டு வழி சாலை திட்டம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம் ,பூச்சி மருந்துகள் ,போன்ற இடுபொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.