தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்யவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவாரூர்: நன்னிலம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

By

Published : Dec 31, 2020, 3:10 PM IST

paddy
paddy

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்நன. திருவாரூர் மாவட்டத்திலும் புரெவி காரணமாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சம்பா தாளடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருந்தது.

தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்கள்

இந்நிலையில், மத்திய குழுவினர் நேற்று (டிச.30) முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ,பாமினி, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் நேரடியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுவிட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நன்னிலம் பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் புயல் மழை வெள்ளத்தால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நன்னிலம் பகுதிகளுக்கும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வருவார்கள், தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல்

மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வராததால் நன்னிலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.இதனால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தனி ஆளாய் நிலத்தை மீட்கப் போராடும் மூதாட்டி: 18 ஆண்டுகாலப் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

ABOUT THE AUTHOR

...view details