தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து விழுந்த சிறுவன்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - cctv news

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Oct 26, 2021, 4:35 PM IST

திருவாரூர்: நேதாஜி நகரைச் சேர்ந்த ஹரி சிங் என்பவரின் மகன் பிரவீன் சிங் (11). இவர் நேற்று (அக்.25) மாலை 20க்கும் மேற்பட்ட சிறுவர்களுடன் மாடியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் அடித்த பந்தை பிரவீன் சிங் தாவிப் பிடிக்க முயன்றபோது மாடியை ஒட்டி உரசிச் சென்ற மின்கம்பி மீது எதிர்பாராத விதமாக பிரவீன் விழுந்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி சிறுவன் விழுந்த சிசிடிவி காட்சி
இந்நிலையில், சிறுவன் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து விழுந்த காட்சி, அங்குள்ள கடை ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அப்பகுதி காவல் துறையினர், பிரவீன் சிங்கின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் வீட்டின்முன் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details