திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கும் உள்நோக்கத்தோடு மத்திய கூட்டுறவு வங்கிகளில் மிரர் வங்கி கணக்கு தொடங்கி விவசாயிகள் வேளாண் கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை பதிவாளர் உத்திரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டோம்.
'கடன் வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி' - விவசாயிகள் தலைவர் பி.ஆர். பாண்டியன்
திருவாரூர்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் கடன் வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 28.08.2020 திருவாரூரில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்திலும் முதலமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து விளக்கினோம். அதனை ஏற்றுக் கொண்டு பழைய முறையில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் கடன் வழங்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கூட்டுறவு பதிவாளர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனே கடன் வழங்கிடவும், கேசிசி கார்டு வழங்கி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
எங்களது கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள் பழைய முறையில் கடன் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.