தமிழ்நாடு

tamil nadu

தஞ்சாவூரில் 24 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

By

Published : Jan 2, 2020, 10:12 AM IST

தஞ்சாவூர்: மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பங்களில் ஈடுபட்ட 24 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 15 நாட்களில் 24 பேர் குண்டர் சட்டதின் கீழ் கைது
கடந்த 15 நாட்களில் 24 பேர் குண்டர் சட்டதின் கீழ் கைது

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களில் நடைபெற்ற கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்ய, ஆட்சியரும் மாவட்ட குற்றவியல் நடுவருமான கோவிந்தராவ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், கொண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் ராஜா (24), பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சூர்யா (20) , பிரகாஸ் (32), மாங்குடியைச் சேர்ந்த கசாய செந்தில் (42 ), மாரியம்மாள் (40), கும்பகோணத்தை சேர்ந்த தனசேகர் (38), அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஜித் (22) , ஜெயந் ரஜினி (19) ,தளபதி ( 29), சிவசக்தி (19) காட்டு ராஜா (20), மணிசங்கர் (19) களங்குடி சரத்குமார் (24), தஞ்சாவூர் ராஜ்குமார் (38) ஆகியோரை கைது செய்தனர்.

கடந்த 15 நாட்களில் 24 பேர் குண்டர் சட்டதின் கீழ் கைது

துலுக்கம்பட்டி நாடார் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நவம்பர் மாதம் 24ஆம் தேதி முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த முரசொலி ( 30 ) , சுபாஷ் சந் திரபோஸ் ( 22 ) , ராஜா ( 31 ) மற்றும் ஆலங்குடி பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (33), சதீஷ்குமார் ( 21 ), அசோக் ( 29 ) , அய்யப்பன் ( 20 ), கடகடப்பை பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( 27 ) , மேலும் தஞ்சாவூர் செவ்வப்ப நாயக் கன்வாரி கீழ்கரைமணி ( 27 ) ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக ஒரு லட்சம் வழக்குகள் தொடர காங்கிரஸ் திட்டம்

ABOUT THE AUTHOR

...view details