திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி கிராமத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கோயிலின் சுற்றுச்சுவர் பல ஆண்டுகளாகவே பராமரிப்பு இல்லாமலும், தொடர் மழை காரணமாகவும் சிதலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (72) என்ற முதியவர் சைக்கிளில் அவ்வழியாகச் செல்லும்போது திடீரென கோயில் சுவர் இடிந்து, அவர் மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.