திருவாரூர் மாவட்டம் கோட்டுரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள உண்டியல் நான்கு மாதஙக்ளுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் உண்டியல் எண்ணும் பணியை கோயில் நிர்வாகம் நிறுத்திவைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று காணிக்கை எண்ணப்பட இருந்த நிலையில் கோயிலின் பின்பக்க கதவை உடைத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.
திருவாரூர் அருகே கோவில் பூட்டை பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு இச்சம்பவம் குறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுவால் மகனைத் தொலைத்த தந்தை