உயர் நீதிமன்ற உத்தரவின்படி இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்திடவேண்டும், சுழற்சி முறையில் பணியிட மாறுதல் அமல்படுத்த வேண்டும், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும், உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - 9 demands
திருவாரூர்: இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சுழற்சி முறையில் பணியிட மாறுதல் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அதன் ஒரு பகுதியாக, திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பாப்பையா தலைமையில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.