திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை வீரன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் மேலத்திருப்பாலக்குடி, உள்ளிக்கோட்டை ,ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இவர்கள் ஆலயத்தில் உள்ள மதுரை வீரனை பரம்பரை பரம்பரையாக குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.